டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2023 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் கர்வ் மின்சார கூபே எஸ்யூவி காரை தொடர்ந்து பல்வேறு மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது. Curvv கூபே ரக மாடல் பேட்டரியில் இயங்கும் வகையிலும் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் விற்பனைக்கு அடுத்த ஆண்டின் துவக்கத்தில் எதிர்பார்க்கலாம்.
ஆட்டோ எக்ஸ்போ 2023 அரங்கில் வந்துள்ள கர்வ் கான்செப்ட் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டதை விட மிக நேர்த்தியாக உற்பத்தி நிலைக்கு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. டாடாவின் “புதிய டிஜிட்டல் டிசைன் மொழி” என்று அழைக்கப்படுகின்றது. ஆனால் எதிர்கால வடிவமைப்புக்கு ஏற்ப மிக கூர்மையான ஸ்டைலிங்கை இந்த எஸ்யூவி கான்செப்ட் பெறுகிறது,
இன்ஜினுக்கு வரும்போது, டாடா நிறுவனம் புதிய 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர், டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ பெட்ரோல் என்ஜின் 1.5-லிட்டர் நான்கு சிலிண்டர் யூனிட் உடன் எஞ்சின் வெளியிடப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக123 bhp மற்றும் 225 Nm வரை வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் விற்பனையில் கிடைக்கின்ற ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகன் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்றவற்றுக்கு நேரடியான போட்டியாக விளங்கும். இந்த காம்பாக்ட் எஸ்யூவி முதலில் மின்சார வாகனமாக வெளியிடப்படும், அதைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் வெர்சனிலும் அறிமுகம் செய்யப்படலாம்.

