ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் ஸ்டைலிங் அம்சங்களை பெற்ற xoom 110cc ஸ்கூட்டர் விலை ரூ.74,399 முதல் துவங்கி அதிகபட்ச வசதிகளை பெற்ற VX வேரியண்ட் விலை ரூ.82,499 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
சூம் 110சிசி LX, VX மற்றும் ZX மூன்று வகைகளில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. டாப் வேரியண்டில் பிரத்தியேகமான கார்னரிங் லேம்ப், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் கூடிய டிஜிட்டல் கிளஸ்ட்டர், 12 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் பெற்றுள்ளது.
Hero xoom 110
மேஸ்ட்ரோ எட்ஜ் 110 மற்றும் ப்ளேசர் பிளஸ் ஸ்கூட்டர்களில் உள்ள 110.9சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் 8.15hp மற்றும் 8.7Nm டார்க் வெளிப்படுத்தும், ஹீரோவின் i3S ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இதன் மூலம் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை கொண்டிருக்கும்.
புதிய Xoom மாடலில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லேம்ப் மற்றும் ரன்னிங் விளக்குகள் அத்துடன் ப்ளூடூத் இணைப்பைக் கொண்ட முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்றுள்ளது. மிக பிரத்தியேகமான கார்னரிங் லேம்ப் வசதி கைரோஸ்கோப்பைப் பயன்படுத்துகிறது. எந்தப் பக்கமாகத் திரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து ஸ்கூட்டரின் இருபுறமும் விளக்குகளின் ஒளிரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் ப்ளைன்ட் ஸ்பாட் இடங்களை அறிந்து கொள்ளலாம்.
LX வேரியண்டில் அனலாக் முறையிலான டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் முன்பக்கத்தில் 130மிமீ டிரம் பிரேக்கை பெறுகிறது.
நடுத்தர வேரியண்ட் VX , நீங்கள் முழு டிஜிட்டல் கருவியைப் பெறுவீர்கள், ஆனால் புளூடூத் இணைப்பு இல்லாமல், மேலும் அகலமான பின்புற டயர் மற்றும் i3S தொழில்நுட்பத்தையும் பெறுவீர்கள்.
புளூடூத், டயமண்ட்-கட் அலாய் வீல்கள், 190மிமீ முன்பக்க டிஸ்க் பிரேக் மற்றும் கார்னரிங் விளக்குகள் ஆகியவை சிறந்த ZX மாறுபாட்டிற்கு பிரத்தியேகமானவையாக வழங்கப்பட்டுள்ளது.
Hero Xoom 110 Price
Variant | Price |
LX | Rs.74,399 |
VX | Rs.77,599 |
ZX | Rs.82,499 |
(tamilnadu ex-showroom price)