மிக ஸ்டைலிஷான ஸ்கூட்டர் மாடலாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மேஸ்ட்ரோ ஜூம் 110 (Hero Mastero XOOM) விற்பனைக்கு ஜனவரி 30 ஆம் தேதி வெளியிடப்படலாம். முன்பே டீலர்களுக்கான முக்கிய கூட்டத்தில் ஜூம் ஸ்கூட்டரின் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
டியோ உள்ளிட்ட ஸ்டைலிஷான ஸ்கூட்டர்களான என்டார்க், அவெனிஸ் மற்றும் ரேஇசட் ஆர் போன்றவற்றை எதிர்கொள்ளும் வகையில் ஜூம் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படலாம்.
Hero XOOM 110
புதிய ஹீரோ ஜூம் ஸ்கூட்டரின் ஸ்டைலிஷான முன்பகுதியில் எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டு X வடிவம் எல்இடி டெயில் விளக்குகளை கொண்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. ஹீரோ Xoom 110 மற்ற ஹீரோ ஸ்கூட்டர்களைப் போலவே அதன் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலுக்குக் கீழே ஒரு USB ஃபோன் சார்ஜர் பெறக்கூடும். டர்ன் இண்டிகேட்டர்கள் சாதாரண ஹாலஜன் விளக்குகளாகும். i3S அம்சத்தைப் பெறுகிறது. i3S என்பது ஹீரோவின் எரிபொருள் சேமிப்பு நிறுத்தம்/தொடக்க அம்சமாகும்.
புளூடூத் இணைப்புடன் கூடிய TFT டிஸ்ப்ளேயையும் ஜூம் மாடல் பெறலாம். கூடுதலாக, இது எஸ்எம்எஸ் எச்சரிக்கைகள் மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷனை பெறுகிறது. ஹீரோ மோட்டோகார்ப்பின் நம்பகமான 110.9சிசி சிங்கிள்-சிலிண்டர் எஞ்சினுடன் 8 பிஎச்பி ஆற்றலை வழங்கும்.
மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரில் 12 அங்குல முன் மற்றும் 10 அங்குல பின்புற டயர் அளவுகளை பெறக்கூடும். ஆனால், ஜூம் மாடலிலும் 12-இன்ச் அலாய் வீல்களைப் பெறும். கூடுதலாக, முன்புறத்தில் டிஸ்க் பிரேக் அமைப்பு பெறலாம்.
மேலதிக விபரங்கள் ஜனவரி 30 ஆம் தேதி விற்பனைக்கு வரும் போது வெளியாகலாம்.