பொதுவாக கார்களில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கீ வசதியை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் முதன்முறையாக ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.
23 ஆண்டுகளாக தொடர்ந்து ஸ்கூட்டர் சந்தையில் நிலைத்து நிற்கும் ஆக்டிவா நவீனத்துவமான வசதியை பெற்று தொடர்ந்து அடுத்த இளைய தலைமுறை வாடிக்கையாளர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா ஆக்டிவா ஸ்மார்ட்
ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் 109.51cc இன்ஜினைப் பயன்படுத்தினாலும், பவர் 7.79 PS ஆக இருந்த நிலையில் தற்பொழுது 7.84 PS ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் டார்க் Nm ஆக உள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஆக்டிவா ஸ்மார்ட் வேரியண்ட் மொத்த வாகன எடை (கெர்ப் எடை + அனுமதிக்கப்பட்ட எடை) ஸ்டாண்டர்ட் மற்றும் DLX டிரிம்களை விட 1 கிலோ குறைவாக உள்ளது.
ஆக்டிவா H-ஸ்மார்ட் கீ செயல்பாடுகள்:
- மிக முக்கிய வசதியாக வாகனம் திருடு போவதனை தடுக்கலாம்.
- எரிபொருள் மூடியைத் திறக்கவும் மற்றும் இருக்கையைத் திறக்கவும்
- ஹேண்டில் லாக் மற்றும் அன்லாக்
- 10 மீட்டர் தொலைவில் இருந்தும் வாகனத்தை கண்டுபிடிக்க பிளிங்கர்களை இயக்கலாம்.
ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் 109.51cc இன்ஜினைப் பயன்படுத்தினாலும், பவர் 7.79 PS ஆக இருந்த நிலையில் தற்பொழுது 7.84 PS ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் டார்க் 8.90 Nm ஆக உள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஆக்டிவா ஸ்மார்ட் வேரியண்ட் மொத்த வாகன எடை (கெர்ப் எடை + அனுமதிக்கப்பட்ட எடை) ஸ்டாண்டர்ட் மற்றும் DLX டிரிம்களை விட 1 கிலோ குறைவாக உள்ளது.
2023 Honda Activa H-Smart price
Activa H-Smart ₹. 80,537 Smart Key with Alloy wheels variant •
Activa ₹. 77, 036 Deluxe variant
Activa ₹. 74,536 for the Standard variant
(Prices ex-showroom)