இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற ஸ்கூட்டர்களில் முதன்மையாக உள்ள ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா 6G ஸ்மார்ட் என்ற பெயரில் விற்பனைக்கு ஜனவரி 23 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள மாடலை விட பல்வேறு நவீனத்துவமான ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.
இரு சக்கர வாகனங்களுக்கான தயாரிப்பாளர் பாதுகாப்பு அமைப்பில் திருடுவதனை தடுக்கும் அம்சமாக ஹோண்டா இக்னிஷன் செக்யூரிட்டி சிஸ்டத்தின் (Honda Ignition Security System – HISS) இடம் பெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹோண்டா ஆக்டிவா ஸ்மார்ட்
சமீபத்தில் வெளியான ஆர்டிஓ பதிவுகளின் மூலம் ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் பவர் வெளியீடு 7.79PS இலிருந்து 7.84PS ஆக உயர்ந்துள்ளது. அதே 109.51cc இன்ஜினைப் பயன்படுத்தினாலும், வரவிருக்கும் ஆக்டிவா ஸ்மார்ட்டின் மொத்த வாகன எடை (கெர்ப் எடை + அனுமதிக்கப்பட்ட எடை) ஸ்டாண்டர்ட் மற்றும் DLX டிரிம்களை விட 1 கிலோ குறைவாக உள்ளது.
ஹோண்டாவின் மீடியா அழைப்பிதழில் ‘எச்-ஸ்மார்ட்’ என்ற வார்த்தையும் உள்ளது, இது வரவிருக்கும் தயாரிப்பு ஆக்டிவாவின் புதிய பதிப்பு என்பதனை ஆதரிக்கிறது.