மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் விலை ரூபாய் 3.49 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் சில முக்கிய அம்சங்களை அறிந்து கொள்ளலாம்.
இன்டர்செப்டர் மற்றும் கான்டினென்டல் ஜிடி என இரு மாடல்களில் பயன்படுத்தப்பட்ட அதே 648சிசி, பேரலல் இரட்டை சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650
19 அங்குல முன்புற சக்கரம் மற்றும் 16 அங்குல பின்புற சக்கரம் பெற்றுள்ள மீட்டியோர் 350 போலவே, சூப்பர் மீட்டியோர் பைக்கில் சியட் ஜூம் க்ரூஸ் டயர்களுடன் கூடிய அலாய் வீல்களில் இயங்குகிறது.
ராயல் என்ஃபீல்டு முதன்முறையாக 43 மிமீ USD ஃபோர்க் சஸ்பென்ஷன் அமைப்பினை வழங்கி உள்ளது. பிரேக்கிங் அமைப்பில் முன்பக்கத்தில் 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 300 மிமீ டிஸ்க் கையாளப்படுகிறது, இது இரட்டை சேனல் ஏபிஎஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. க்ரூஸர் ஸ்டைல் மோட்டார்சைக்கிளின் எடை விநியோகம் மிக சீராக கொடுக்கப்பட்ட பெரிய பின்புற பிரேக்கை பெற்றுள்ளது.
241 கிலோ எடை கொண்ட மீட்டியோர் 650 மாடலில் அஸ்ட்ரல், இன்டர்ஸ்டெல்லர் மற்றும் செலஸ்டியல் உள்ளிட்ட மூன்று விதமான வேரியன்டில் பைக் கிடைக்கும். அனைத்தும் காட்சி கூறுகள் மற்றும் பாகங்கள் அடிப்படையில் வேறுபடுகின்றன. உதாரணமாக, செலஸ்டியல் டிரிம் ஒரு உயரமான கண்ணாடி மற்றும் ஒரு பிலியன் பேக்ரெஸ்ட் கொண்ட டூரிங் பைக்காகும்.
Royal Enfield Super Meteor 650 Variants | Prices (ex-showroom) |
Astral | Rs. 3.49 lakh |
Interstellar | Rs. 3.64 lakh |
Celestial (Tourer) | Rs. 3.79 lakh |
ரூபாய் 3.49 லட்சம் முதல் ரூபாய் 3.79 லட்சம் வரை ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
three colour variants – Astral, Interstellar and Celestial
648சிசி ட்வீன் சிலிண்டர் என்ஜின் 47 bhp at 7,250 rpm மற்றும் torque 52.3 Nm at 5,650 rpm