இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் சந்தையின் முதன்மையான மாடலான டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் EV காரின் விலை ரூ.14.49 லட்சம் முதல் ரூ.18.99 லட்சம் வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. மேக்ஸ் வரிசையில் XM வேரியண்ட் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
புதிதாக விற்பனைக்கு வந்துள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 400 கார் அதிகபட்சமாக 456 கிமீ ரேஞ்சு வெளிப்படுத்தும் நிலையில் போட்டியாளரான நெக்ஸான் EV மேக்ஸ் மென்பொருள் மேம்பாடு மூலம் இப்பொழுது 453 கிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு நெக்ஸான் 437 கிமீ ஆக இருந்தது.
டாடா நெக்ஸான் EV
நாட்டில் மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் PLI (Production-Linked Incentive) திட்டத்தின் காரணமாக எலக்ட்ரிக் எஸ்யூவி விலை குறைக்கப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. விலைக் குறைப்பு காரணமாக நெக்ஸான் EV மாடலின் முதல் மற்றும் நேரடி போட்டியாளரான XUV400 எதிர்கொள்ளும் நடவடிக்கையாகும்.
டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் EV மேக்ஸை வேரிநண்டிற்கு மட்டும் ரேஞ்சு உயர்த்துவதற்கான மேம்பாடு வழங்கியுள்ளது. இப்போது 453 கிமீ (MIDC சுழற்சி) வரை உயர்த்தப்பட்டுள்ளது,. முன்பாக 437 கிமீ ரேஞ்சை விட 16 கிமீ அதிகம் ஆகும்.
40.5kWh பேட்டரிக்கு மேம்படுத்தல் எதுவும் இல்லை, மேலும் இது மென்பொருள் புதுப்பிப்பு மூலம் சாத்தியமாகியுள்ளது. Nexon EV Max மாடலின் தற்போதைய உரிமையாளர்களும் இந்த மேம்படுத்தப்பட்ட ரேஞ்சு பெற்று பயனடைவார்கள். பிப்ரவரி 15 முதல் மென்பொருள் மேம்பாடு மூலம் அவர்களுக்குக் கிடைக்கும். இருப்பினும், பிரைம் 30.2kWh பேட்டரியுடன் வரும் வேரியண்டுகளில் அப்டேட் வழங்கப்படவில்லை.
Tata Nexon EV price list
புதிய டாடா நெக்ஸான் EV காரின் விலை ரூ.14.49 லட்சம் முதல் ரூ.18.99 லட்சம் ஆகும்.
புதிய நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் ரேஞ்சு 453 கிமீ ஆகும்.
நெக்ஸான் EV காருக்கு நேரடி போட்டியை மஹிந்திரா எக்ஸ்யூவி 400 ஏற்படுத்துகின்றது.