விற்பனையில் உள்ள சி3 ஐசி என்ஜின் கார் அடிப்படையில் சிட்ரோன் eC3 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு ஜனவரி 22 ஆம் தேதி துவங்கப்பட உள்ளது. விலை அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்படலாம்.
சிட்ரோன் eC3 கார் விற்பனையில் உள்ள பெட்ரோல் என்ஜின் மாடலை போலவே அமைந்துள்ளது. டெயில்பைப் இல்லாமலும் முன் ஃபெண்டரில் அமைந்துள்ள புதிய சார்ஜிங் போர்ட் ஆகும். உட்புறம், இதற்கிடையில், மேனுவல் கியர் லீவரை மாற்றியமைக்கும் புதிய டிரைவ் கண்ட்ரோலருடன், சற்று மாற்றியமைக்கப்பட்ட சென்டர் கன்சோலை பயன்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோலில் இயங்கும் அனைத்து வெளிப்புற பாடி பேனல்கள், உட்புறம் மற்றும் மெக்கானிக்கல்கள் மாறாமல் அமைந்துள்ளது.
சிட்ரோன் eC3
சிட்ரோன் eC3 எலெக்ட்ரிக் காரில் 29.2kWh பேட்டரி பேக்கைப் பெறுகிறது, இது சீன நிறுவனத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. 3.3kW ஆன்போர்டு AC சார்ஜருடன் வருகின்ற மாடல் CCS2 வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. eC3 முன்புற வீல் டிரைவ் பெற்று மின்சார மோட்டார் 57hp மற்றும் 143Nm டார்க் உற்பத்தி செய்கிறது. eC3 கார் அதிகபட்சமாக ARAI சான்றளிக்கப்பட்ட 320km வரம்பைக் கொண்டுள்ளது. இரண்டு டிரைவிங் மோடுகள் ஈகோ மற்றும் ஸ்டாண்டர்ட் உடன் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் பெறுகிறது.
eC3 மின்சார கார் 6.8 வினாடிகளில் 0-60 கிமீ வேகத்தை எட்ட இயலும் மற்றும் மணிக்கு 107 கிமீ வேகத்தில் பயணிக்கலாம். இந்த காருக்கு DC ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 57 நிமிடங்களில் 10-80 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும். வீட்டு சார்ஜரில், பேட்டரி 10.5 மணி நேரத்தில் 100 சதவீதம் வரை டாப்-அப் செய்ய முடியும்.
சிட்ரோன் நிறுவனம் ec3 காருக்கு பேட்டரி பேக் 7 ஆண்டுகள் அல்லது1,40,000 கிமீ வாரண்டியையும், மின்சார மோட்டாருக்கு 5 ஆண்டுகள் அல்லது 1,00,000 கிமீ வாரண்டியையும், காருக்கு 3 ஆண்டுகள் அல்லது 1,25,000 கிமீ வாரண்டியையும் வழங்குகிறது.
29.2kWh பேட்டரி பேக் பெற்றுள்ள சிட்ரோன் eC3 எலெக்ட்ரிக் கார் அதிகபட்சமாக 320 கிமீ வழங்கும்.
சிட்ரோன் eC3 எலெக்ட்ரிக் கார் விலை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.