பிரசத்தி பெற்று மாருதி ஸ்விஃப்ட் காருக்கு சவாலாக விளங்கும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விலை ரூ.5.69 லட்சத்தில் துவங்குகின்றது. பெட்ரோல் வேரியண்ட் மட்டுமல்லாமல் சிஎன்ஜி ஆப்ஷனிலும் கிடைக்க உள்ளது.
இந்தியாவில் விற்பனையில் உள்ள சுசூகி ஸ்விஃப்ட், டாடா டியாகோ என இரு மாடலுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தியுள்ளது.
2023 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்
2023 ஹூண்டாய் கிராண்ட் i10 Nios காரில் முன்பக்க பம்பரை மிக நேர்த்தியான கருப்பு நிற விரிவாக்கப்பட்ட கிரில்லை கொண்டுள்ளது. இது புதிய ட்ரை அம்பு வடிவ எல்இடி ரன்னிங் விளக்குகள் பெற்றுள்ளது. புதிய 15 இன்ச் அலாய் வீல்களுடன், ஹேட்ச்பேக்கில் லைட் பார் மூலம் இணைக்கப்பட்ட புதிய எல்இடி டெயில் லைட்களும் உள்ளன. ஹூண்டாய் இப்போது போலார் ஒயிட், டைட்டன் கிரே, டைஃபூன் சில்வர், டீல் ப்ளூ மற்றும் ஃபியரி ரெட் விருப்பங்களுடன் புதிய ஸ்பார்க் கிரீன் நிறத்தை வழங்குகிறது.
Era, Magna, Sportz, Asta போன்ற வேரியண்டுகளை பெற்றுள்ள ஐ10 நியோஸ் கார் மாடலுக்கு ஏபிஎஸ் மற்றும் இபிடி ஆகியவற்றுடன் நான்கு ஏர்பேக்குகள் அனைத்து வேரியண்டிலும் உள்ளது. கூடுதலாக, டாப் பவேரியண்டில் ஆறு ஏர்பேக்குகள், ISOFIX , ESC, ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் உள்ளன.
மற்ற அம்சங்களைப் பொறுத்தவரை, 8.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, பின்புற ஏசி வென்ட்கள், ஆட்டோ ஏசி கட்டுப்பாடு மற்றும் வயர்லெஸ் சார்ஜர் ஆகியவற்றுடன் வந்துள்ளது. இதற்கிடையில், டாப் வேரியண்டில் டைப்-சி யூ.எஸ்.பி போர்ட்கள், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (டிபிஎம்எஸ்) போன்ற அம்சங்களையும் பெறுகின்றன.
1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 83 எச்பி மற்றும் 113.8 என்எம் டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸுடன் வந்துள்ளது. கூடுதலாக, 69hp மற்றும் 95.2Nm டார்க்கை உருவாக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் கிடைக்கிறது. இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் மட்டுமே வழங்கப்படுகிறது.
Hyundai Grand i10 Nios facelift Price
Variant | Era | Magna | Sportz | Asta |
1.2 Petrol MT | Rs 5.68 lakh | Rs 6.61 lakh | Rs 7.20 lakh | Rs 7.93 lakh |
1.2 Petrol AMT | — | Rs 7.23 lakh | Rs 7.74 lakh | Rs 8.46 lakh |
1.2 CNG MT | — | Rs 7.56 lakh | Rs 8.11 lakh | — |