Tamil BHPTamil BHP
    Facebook Twitter Instagram
    Tamil BHPTamil BHP
    • News
    • Car news
    • bike news
    • Car and bike reviews
    • auto show
    • Auto Tips
    • Auto Expo 2023
    Facebook Twitter Instagram
    Tamil BHPTamil BHP
    Home மாருதி சுசூகி Fronx Vs பலேனோ என இரு கார்களில் சிறந்தது எது?
    comparison

    மாருதி சுசூகி Fronx Vs பலேனோ என இரு கார்களில் சிறந்தது எது?

    Tamil BHP TeamBy Tamil BHP Team2 Mins Read
    Share Facebook Twitter WhatsApp LinkedIn Telegram Email Pinterest
    Share
    Facebook Twitter WhatsApp Telegram Email

    ஆட்டோ எக்ஸ்போ 2023 அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட மாருதி சுசூகி Fronx க்ராஸ்ஓவர் காரில் உள்ள வசதிகளுடன் விற்பனையில் உள்ள மாருதி சுசூகி பலேனோ என இரு கார்களை ஒப்பீட்டு பல்வேறு முக்கிய சிறப்புகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

    பலேனோ காரின் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள Fronx காரில் தோற்ற மாற்றங்கள் உட்பட ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் சில வசதிகளை கூடுதலாக பெற்றிருக்கும்.

    மாருதி Fronx Vs மாருதி பலேனோ

    விற்பனையில் கிடைத்து வருகின்ற பலேனோ ஹேட்ச்பேக் காரின் அடிப்படையில் HEARTECT பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃபிரான்க்ஸ் காரின் நீளம், அகலம் மற்றும் உயரம், குறிப்பாக ஃபிரான்க்ஸ் காரின் வீல் பேஸ் 20 மிமீ வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சற்று கூடுதலாக அமைந்து அகலமான பம்பர், நேர்த்தியான கூபே ரக கார்களுக்கு இணையாக பின்புற கதவுகள் மற்றும் பம்பர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக முன்புற பம்பர் கிராண்ட் விட்டாரா காரின் உந்துதலை பெற்று ஸ்பிளிட் ஹெட்லைட் செட்டப், அகலமான பம்பர் கிளாடிங், உயரமான வீல் ஆர்சு பெற்றுள்ளது. பின்புறத்தில் சரிவான மேற்கூறை அகலமான கிளாடிங் பெற்ற பம்பர் ஆகியவற்றை கொண்டுள்ளது.

    Dimensions

    Fronx

    Baleno

    Length

    3,995mm

    3,990mm

    Width

    1,765mm

    1,745mm

    Height

    1,550mm

    1,500mm

    Wheelbase

    2,520mm

    2,520mm

    அடுத்ததாக இன்டிரியர் அமைப்பில் பலேனோ காரில் உள்ளதை போன்ற வசதிகளை பெற்றிருந்தாலும் டிசைனிங் மற்றும் டேஸ்போர்ட் கலரினை பொறுத்தவரை விற்பனையில் உள்ள கிராண்ட் விட்டாரா காரின் இன்டிரியரை போன்ற தோற்ற அமைப்பினை கொண்டுள்ளது.

    ஒன்பது அங்குல இன்ஃபோடெயின்மென்ட் , வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் புஷ் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் ஆகியவற்றுடன் ஆறு ஏர்பேக்குகள், ESP, ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் 360-டிகிரி கேமராவுடன் பாதுகாப்பு வசதிகள் ஒரே மாதிரியாக இருக்கும். ஃப்ரான்க்ஸ் காரில் ஒரே மாற்றம் வயர்லெஸ் போன் சார்ஜிங் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

    என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்

    Fronx மற்றும் Baleno என இரு கார்களும் பொதுவாக 1.2 லிட்டர் மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் என்ஜின் பெற்றிருக்கின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 90 ஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது.

    டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பொறுத்தவரை 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

    Specs Fronx Baleno
    Engine 1.2-litre petrol 1.0-litre turbo-petrol 1.2-litre petrol
    Power 90PS 100PS 90PS
    Torque 113Nm 148Nm 113Nm
    Transmissions 5-speed MT / 5-speed AMT 5-speed MT / 6-speed AT 5-speed MT / 5-speed AMT

    மீண்டும் பவர்ஃபுல்லான டர்போ பெட்ரோல் என்ஜினை மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ் கார் மூலம் கொண்டு வந்துள்ளது.

    1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் (மைல்டு ஹைபிரிட்) 100PS மற்றும் 148Nm டார்க் வெளிப்படுத்தும். டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் ஐந்து வேக மேனுவல் மற்றும் ஆறு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவை அடங்கும்.

    மாருதி Fronx விலை எவ்வளவு ?

    மாருதி Fronx காருக்கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் விற்பனையில் உள்ள பலேனோ வேரியண்ட்களை விட ரூ. 1 லட்சம் விலை கூடுதலாக இருக்கலாம்.

    Tamil BHP news
    Maruti Suzuki Baleno Maruti Suzuki Fronx
    Share. Facebook Twitter Telegram WhatsApp Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleகிளான்ஸா & ஹைரைடர் கார்களை திரும்ப பெறும் டொயோட்டா
    Next Article ₹.5.69 லட்சத்தில் ஹூண்டாய் கிராண்ட் i10 Nios விற்பனைக்கு வந்தது
    Categories
    • Auto Expo 2023 (1)
    • Auto Tips (1)
    • bike news (5)
    • Car news (6)
    • comparison (1)
    • News (3)
    Facebook Twitter Instagram Pinterest
    © 2023 . Tamil BHP Auto News Tamil.

    Type above and press Enter to search. Press Esc to cancel.