நமது தமிழ்நாடு மாநிலத்தில் அதிகப்படியான பனி பொழிவு ஒரு சில இடங்களில் மட்டுமே இருந்தாலும் பொதுவாக நாம் பனி காலங்களிலும் வாகனத்தை மிக கவனமாக இயக்குவது எப்படி என அறிந்து கொள்ளலாம்.
பனி காலத்தில் வாகனம் ஓட்டி செல்பவர்களுக்கு, பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. மிகவும் கவனமாக இயக்கவேண்டியது அவசியாகும்.
பனி கால வாகன சில டிப்ஸ்
பனி காலத்தில் காரை ஓட்டி செல்லும் போது, ஹெட்லைட்கள் லோ பீம் பயன்பாடு, பனி விளக்குகள் (Fog Lamps) கட்டாயம் ஒளிர விடவேண்டும். எதிரே வரும் வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகுவதனை பெரிதும் தவிர்க்க உதவும்.
அடர் பனி நேரத்தில் வாகனங்களை மிக கவனமாக இயக்குவதுடன், குறைந்த வேகத்தில் இயக்கலாம்.
இது மாதிரியான சூழ்நிலையில் லேன் கோடுகள் பெரிதும் உதவும். லேன் கோடுகள் மற்றும் வரவிருக்கும் போக்குவரத்து தொடர்பான குறிப்புகளை கவனமாக கையாள வேண்டும்.
ஒற்றை பாதையில் வாகனம் ஓட்டும் போது, மோதலை தவிர்க்க இடதுபுறமாக மட்டுமே ஓட்ட முயற்சிக்கவும்.
மூடுபனியின் போது எதிர் வரும் மற்றும் பின்தொடரும் வாகனங்களை எச்சரிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே உங்கள் வாகன இன்டிகேட்டர் அல்லது பார்க்கிங் விளக்குகளை பயன்படுத்தவும்.
ரியர் டீஃபோக்கர், முன்புற கண்ணாடிகளுக்கு ஹீட்டர் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளவதனால் பனி படர்ந்திருக்கு கண்ணாடிகள் சூடாகி நமக்கு தெளிவான காட்சியை வழங்கும்.
பனிமூட்டமான சாலையில் வாகனம் ஓட்டும்போது எந்தவொரு வாகனத்தையும் முந்திச் செல்லாதீர்கள். இது மற்ற வாகனத்தின் ஓட்டுநரின் கவனத்தை சிதறடித்து விபத்தினை ஏற்படுத்த காரணமாக அமைந்து விடும்.
மிக தெளிவற்ற நிலையில் மூடுபனி சமயத்தினை எதிர்கொண்டால் வாகனத்தை மிக பாதுகாப்பாக சாலைகளில் இருந்து சில அடிகள் தள்ளி , ஹசார்ட் விளக்குகளை ஒளிர விட்டு பனி குறையும் வரை காத்திருப்பது அனைவருக்கும் நல்லது..
பாதுகாப்பான பயணத்திற்க்கு சீட் பெலட் அணிவது கட்டாயமாகும்.