ஏர்பேக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள 17,362 வாகனங்களில் தவறான காற்றுப்பை கன்டோரலர்கள் உள்ளதால் இதனை இலவசமாக மாற்றிக் கொடுக்க உள்ளது. ஆல்டோ K10, S-பிரெஸ்ஸோ, ஈக்கோ, பிரெஸ்ஸா, பலேனோ மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மாருதி சுசுகி இந்தியாவில் உள்ள 17,362 வாகனங்களை திரும்பப் பெற்றுள்ளது. ஆல்டோ கே10, எஸ்-பிரஸ்ஸோ, ஈகோ, பிரெஸ்ஸா, பலேனோ மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகியவை பழுதடைந்த ஏர்பேக் கன்ட்ரோலர்களில் உள்ள கோளாறால் ஏர்பேக் இயங்காமல் போகலாம். , இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ள இந்த சரவீஸ் ஏர்பேக் குறைபாடு நீக்கப்பட உள்ளது. இந்த மாடல்கள் டிசம்பர் 8, 2022 மற்றும் ஜனவரி 12, 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்டன.
மாருதி கூறுகையில், மிகுந்த எச்சரிக்கையுடன், சந்தேகத்திற்கிடமான வாகனங்களின் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதியை மாற்றும் வரை வாகனத்தை ஓட்டவோ அல்லது பயன்படுத்தவோ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் மாருதி சுஸுகி அங்கீகரிக்கப்பட்ட பணிமனைகளில் இருந்து உடனடி தகவல் பெறுவார்கள் என உறுதிப்படுத்தியுள்ளது.