மாருதி நிறுவனத்தை தொடர்ந்து டொயோட்டா நிறுவனமும் தனது கிளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் என இரு மாடல்ளில் 1390 யூனிட்டுகள் ஏர்பேக் கோளாறின் காரணமாக திரும்ப அழைத்துள்ளது.
பழுதடைந்த ஏர்பேக் கன்ட்ரோலர்களில் உள்ள கோளாறால் ஏர்பேக் இயங்காமல் போகலாம். , இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ள இந்த சரவீஸ் ஏர்பேக் குறைபாடு நீக்கப்பட உள்ளது. இந்த மாடல்கள் டிசம்பர் 8, 2022 மற்றும் ஜனவரி 12, 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்டன.
எச்சரிக்கையுடன், சந்தேகத்திற்கிடமான வாகனங்களின் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதியை மாற்றும் வரை வாகனத்தை ஓட்டவோ அல்லது பயன்படுத்தவோ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. மாருதி சுசூகி இது போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.